மதுரையில் தண்ணீர் தரும் அதிசய மரமா? குடம் குடமாக பிடித்த மக்கள்

0 2496

துரை பழங்காநத்தம் பகுதியில் மரத்திலிருந்து திடீரென தண்ணீர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பழங்காநத்தம் பகுதி அருகே உள்ள துரைசாமி நகரில் சாலையோரத்தில் ஒரு வாகை மரம் இருந்தது.அந்த மரத்தில் இருந்து திடீரென்று இன்று தண்ணீர் வர தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை குடம் குடமாக பிடித்து சென்றனர். மரத்தை ஏராளமான மக்கள் பார்த்து சென்றனர்.

சிறிது நேரத்தில் பீச்சியடித்த தண்ணீர் தானாகவே நின்றது. இதுகுறித்து மக்கள் கூறுகையில், மரத்துக்கு அடியில் பைப்லைன் இருந்ததாகவும் இந்த மரத்தின் வேர் தந்த அழுத்தத்தால் திடீரென உடைந்து மரத்திலிருந்து தண்ணீர் வந்திருக்கலாம் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments