அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 4130
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் தெரிவித்தார்.

மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், கிராமப்புற மாணவர்களால் சரியாக ஆங்கிலம் பேச முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார். ஆகையால், பள்ளி நேரம் முடிந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு தனியாக அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்த முடிவு செய்து, அதனை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.

இந்த அறிவிப்பை வரவேற்று பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் பயிலக்கூடிய மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலம் பேச முடியாமல் சிரமப்படுவதாகவும், இது நல்ல முயற்சி எனவும் பாராட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments