வேலூர் : வாகனங்களை நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார்... சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவால்... ஆயுதப்படைக்கு மாற்றம்

0 6909

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடியாத்தம்-சித்தூர் நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சரவணன்,  வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததை வேன் ஓட்டுனர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டார்.

இதனையடுத்து போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சரவணன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments