நடிகர் சூர்யாவின் "2டி எண்டர்டெயின்மென்ட்" தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி

0 2449

டிகர் சூர்யாவின் 2டி எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் போலி இ - மெயில் கணக்கு உருவாக்கி, நடிகர், நடிகைகள் தேவை என்று அழைப்பு விடுத்து, பணம் வசூலிக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் 36 வயதினிலே, பசங்க 2, சிங்கம் 2, கடைக்குட்டி சிங்கம் என பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பெயரில் போலி இ - மெயில் கணக்கு உருவாக்கி, அதன்  லோகோவையும் பயன்படுத்தி, மோசடி கும்பல் ஒன்று, நடிகர், நடிகைகள் தேவை என்ற அழைப்பை விடுப்பதாகவும் அதனை நம்பி தொடர்பு கொள்வோரிடம் ஜி பே மூலம் தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த இ மெயிலை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள நிறுவனத்  தரப்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments