ஆப்கனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்படும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

0 2642
ஆப்கனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்படும்

ஆப்கனில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் உத்தரவுப்படி டெல்லியில் கூட்டப்பட்ட நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதைத் தெரிவித்தார்.ஆப்கனில் இருந்து முடிந்த வரை அனைத்து இந்தியர்களையும் மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தேவி சக்தி என்ற பெயரில் 6 விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், சில ஆப்கன் குடிமக்களையும் மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆப்கனில் மதசுதந்திரம் மற்றும் ஜனநாயகம் காக்கப்படும் என்ற தோஹா ஒப்பந்த விதிகளை தாலிபன்கள் மீறி விட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, எதிர்க்கட்சி தலைவர்கள் சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே, டிஆர் பாலு,தேவ கவுடா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments