'வாத்தியாரே இதுதான் டுவிட்டர், பாக்ஸிங்க விட இது ரத்த பூமி '... வாத்தியார் என்ட்ரிக்கு கபிலன் வரவேற்பு

0 3308

டிகர் பசுபதி புதிதாக டுவிட்டர் கணக்கு தொடங்கியுள்ள நிலையில்,  அவரை நடிகர் ஆர்யா வரவேற்று பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது பெயரில் பல போலி டுவிட்டர் கணக்குகள் உருவானதை அடுத்து, நடிகர் பசுபதி அதிகாரபூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.

அவரை வரவேற்கும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'வாத்தியாரே இதுதான் டுவிட்டர் வாத்தியாரே,  பாக்ஸிங்க விட இது ரத்த பூமி, உன்னோட பேர்ல இங்க நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சதும், ஒரிஜினல் நான்தான்டானு வந்த பாத்தியா, உன் மனசே மனசு தான், வா வாத்தியாரே டுவிட்டர் உலகத்துக்குள்ள போகலாம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பசுபதி, ஆமாம் கபிலா பாக்சிங்கே உலகமுன்னு இருந்துட்டேன், என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ என பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments