கொலை மிரட்டல் வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன்

0 2133

கொலை மிரட்டல் வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த ஆண்டு ஜோ மைக்கேல் என்பவர் அளித்த புகாரில்,  மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீசார், மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இருப்பினும், பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவலில் இருப்பதால் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments