குப்பை தொட்டியில் மனித எலும்புகள், மண்டை ஓடு கிடந்த விவகாரம் ; மருத்துவ மாணவிக்கு போலீசார் சம்மன்

0 1774
மருத்துவ மாணவிக்கு போலீசார் சம்மன்

சென்னை சாஸ்திரி நகரில், குப்பை தொட்டியில் கிடந்த மனித எலும்புகள், மண்டை ஓட்டை, சுடுகாட்டில் வாங்கியதாக மருத்துவ மாணவி ஒருவர் கூறிய நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, எலும்பு கூடு அடங்கிய பையை வீசிச் சென்ற காவலாளி பார்த்தசாரதி என்பவரை விசாரித்ததில், ஓனரின் காரை சுத்தம் செய்யும் போது கிடைத்தாக கூறியுள்ளார். இதையடுத்து, சிவசுப்பிரமணியன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தனது நண்பர் அரவிந்தின் மகள் தனலட்சுமி காரை பயன்படுத்திவிட்டு கடந்த 23ம் தேதி தன்னிடம் கொடுத்ததாகவும், காரை சுத்தம் செய்த போது கிடந்த பையை, குப்பை தொட்டியில் வீசுமாறு காவலாளியிடம் கூறியதாகவும் சிவசுப்பிரமணியன் கூறினார்.

இதையடுத்து தனலட்சுமியிடம் விசாரித்ததில், தான் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு வருவதாகவும், படிப்புக்காக சுடுகாட்டில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து எலும்பு கூடு வாங்கியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்த, மாணவியை நேரில் வருமாறு அழைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments