தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், தங்கள் நாட்டவர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

0 2456

காபூல் விமான நிலையத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், தங்கள் நாட்டவர்கள் அப்பகுதியில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் தப்பிச் செல்லும் நோக்கில் காபூல் விமான நிலையத்தை சுற்றி குழுமி உள்ளனர். இதனிடையே  வரும் செவ்வாய்க்கிழமைக்குள் ஆப்கனில் இருந்து அனைத்து அமெரிக்கர்களையும் மீட்பதில் அதிபர் பைடன் தீவிரமாக உள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக, உரிய அறிவுறுத்தல் வரும் வரை, காபூல் விமான நிலையத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும், விமான நிலையத்திற்கு வந்திருந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அமெரிக்க  வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments