காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்

0 4048

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவியும், அவரது காதலனும் ஒரு காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கியது.

பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டாக பலாத்காரம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments