ஆப்கான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க ஏற்பாடு

0 1351

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியர்கள் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments