மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது - மத்திய அரசு

0 2767

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட திருத்திய வழிகாட்டல் குறிப்பின்படி ரயில் ,வான், தரை வழியாகவோ நீர் வழியாகவோ அனைத்து போக்குவரத்துகளும் தடையின்றி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் நுழைவதற்கு RT-PCR பரிசோதனைகள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments