நடிகை மீரா மிதுன் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது

0 1768
நடிகை மீரா மிதுன் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது

 

பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள மீரா மிதுன், கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், உட்பட ஐந்து பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகத நிலையில்தான் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை காலை அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments