முட்புதரில் வீசப்பட்டாலும் வாயுள்ள பிள்ளை உயிர் பிழைக்கும்..!

0 5866
வந்தவாசி அருகே பிறந்து ஒரு மணி நேரமேயான நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று ஏரிக்கரை முட்புதருக்குள் உயிருடன் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விடாமல் வீறிட்ட அழுகை சத்தத்தால் குழந்தை பிழைத்துக் கொண்ட அதிசயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

வந்தவாசி அருகே பிறந்து ஒரு மணி நேரமேயான நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று ஏரிக்கரை முட்புதருக்குள் உயிருடன் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விடாமல் வீறிட்ட அழுகை சத்தத்தால் குழந்தை பிழைத்துக் கொண்ட அதிசயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்புதூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை முட்புதரில் இருந்து குழந்தை ஒன்று வீரிட்டு அழுத சத்தம் கேட்டது. ஆள்னடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து வரும் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட சிலர் அந்த புதர் பகுதில் சென்று பார்த்த போது பிறந்து ஒரு மணி நேரம் ஆன ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தில் யரும் இல்லத நிலையில் வெள்ளைதுணியில் சுற்றி வீசப்பட்ட அந்த ஆண்குழந்தையை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். குழந்தை கிடைத்த தகவல் வாட்ஸ் அப்பில் தீயாய்பரவ பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி அளித்து பராமரித்து வருகின்றனர்.

முட்புதருக்குள் குழந்தையை வீசிச்சென்றது யார் ? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் குறைந்த அந்த பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையென்றால் இந்த குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்த காவல்துறையினர் என்ன காரணத்திற்காக பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments