கணவர் கொரோனாவால் உயிரிழந்த துக்கத்தில் 8 வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்..

0 4030
சென்னை சேலையூர் அருகே கணவர் கொரோனாவால் உயிரிழந்த துக்கத்தில் 8 வயது மகனுடன் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை சேலையூர் அருகே கணவர் கொரோனாவால் உயிரிழந்த துக்கத்தில் 8 வயது மகனுடன் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - பால ஈஸ்வரி தம்பதிக்கு 8 வயதில் லக்சத் நாராயணன் என்ற மகன் இருந்தார்.

ரவிச்சந்திரன் 3 மாதங்களுக்கு முன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாடம்பாக்கத்தில் சகோதரி வீட்டில் தங்கியிருந்த பால ஈஸ்வரி, கணவரின் இழப்பால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரம், மின் விசிறியில் சேலையை மாட்டி, மகனுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments