இ - விசா இருந்தால் மட்டுமே ஆப்கானியர் இந்தியாவுக்கு வரலாம்.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

0 3120
ஆப்கானிஸ்தான் நாட்டவர் மின்னணு விசா பெற்றிருந்தால் மட்டுமே இந்தியாவுக்குப் பயணிக்க முடியும் என இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்போதுள்ள சூழலில் நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டவர் மின்னணு விசா பெற்றிருந்தால் மட்டுமே இந்தியாவுக்குப் பயணிக்க முடியும் என இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்போதுள்ள சூழலில் நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானியர்கள் அடைக்கலம் தேடிப் பல நாடுகளுக்கும் வெளியேறி வருகின்றனர். காபூல், காந்தகார் ஆகிய நகரங்களில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறிவிட்ட நிலையில் இந்தியாவுக்கு வருவதற்கு அங்கே விசா வழங்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் இப்போதுள்ள நிலவரத்தால் நாட்டின் பாதுகாப்புக் கருதி, மின்னணு விசா இருந்தால் மட்டுமே ஆப்கானியர்கள் இந்தியாவுக்கு வர முடியும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆப்கானியர்கள் தவிர, ஏற்கெனவே விசா பெற்றிருந்து வெளியே உள்ள ஆப்கானியர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது. ஆப்கானில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்புவோர் இணையத்தளத்தில் விண்ணப்பித்து விசா பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின் முதன்முறையாக அந்த அமைப்பினருடன் சீனா பேச்சு நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எண்ணூறு டன் விமான எரிபொருளை வழங்கத் துர்க்மேனிஸ்தான் முன்வந்துள்ளது. ஆகஸ்டு 14 முதல் இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ விமானங்கள் மூலம் 82 ஆயிரத்து 300 பேரை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆப்கான் நிலவரம் குறித்து சீன அதிபர் சி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள ரஷ்யா, தஜிக்கிஸ்தானில் ராணுவப் பயிற்சியையும் நடத்தி வருவதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments