அலுவலகத்தில் மது அருந்தி தெனாவட்டு காட்டிய அரசு ஊழியர்... இணையத்தில் வீடியோ வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்கள்!

0 13451
சென்னை திருவொற்றியூர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்திய ஊழியர், அதனைத் தட்டிக் கேட்ட இளைஞரிடம் அலட்சியமாக பதிலளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை திருவொற்றியூர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்திய ஊழியர், அதனைத் தட்டிக் கேட்ட இளைஞரிடம் அலட்சியமாக பதிலளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தியாகராயபுரத்தில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஜீவா என்பவர் ஆபரேட்டராகப்  பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்துக்குள் இரவு நேரங்களில் ஜீவாவுடன் சிலர் உள்ளே செல்வதும் வெளியேறுவதுமாக இருந்ததைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ஜீவா, கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம் போதையில் அவர் அலட்சியமாக பதிலளிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments