காபூலில் இந்திய அலுவலகத்தை தாக்கி பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய கும்பல்.. பாகிஸ்தானியர்களா என சந்தேகம்

0 3204
காபூலில் கடந்த 15ந் தேதி இந்திய விசா தொடர்பான அலுவலகத்திற்குள் நுழைந்த உருது பேசும் கும்பல், இந்திய விசா முத்திரையிடப்பட்ட ஏராளமான ஆப்கன் பாஸ்போர்ட்டுகளை திருடிச் சென்ற தகவல் வெளியாகி உள்ளது.

காபூலில் கடந்த 15ந் தேதி இந்திய விசா தொடர்பான அலுவலகத்திற்குள் நுழைந்த உருது பேசும் கும்பல்,  இந்திய விசா முத்திரையிடப்பட்ட ஏராளமான ஆப்கன் பாஸ்போர்ட்டுகளை திருடிச் சென்ற தகவல் வெளியாகி உள்ளது.

கும்பலை சேர்ந்தவர்கள் உருது பேசியதால், பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருடிச் செல்லப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் உள்ள புகைப்படங்களை மாற்றி  எதிர்காலத்தில் இந்தியாவிற்கு தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் அபாயம் இருப்பதால், இந்த தகவல் உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதை தொடர்ந்தே காபூலில் ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டு இனி இ விசா மட்டுமே செல்லும் என்று இந்தியா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments