சிறையில் சொகுசு வசதி? சசிகலாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0 2653

லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதி பெற்றதாக கூறப்படும் வழக்கில் சசிகலாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பரப்பன அஹ்ரஹாரா சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த கீதா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம், விசாரித்தவரை உள்ள தகவல்களை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சீலிடப்பட்ட உறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு செப்டம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments