பண்ணை வீட்டை நட்சத்திர விடுதி அளவுக்கு அலங்கரித்து வைத்திருக்கும் மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர்..! - வெளியான வீடியோ காட்சிகள்

0 2788
மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரனின் ஈ.சி.ஆர். பண்ணை வீடு நட்சத்திர விடுதி போன்று விலையுயர்ந்த அலங்கார பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரனின் ஈ.சி.ஆர். பண்ணை வீடு நட்சத்திர விடுதி போன்று விலையுயர்ந்த அலங்கார பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சட்ட விரோத பணபரிமாற்ற புகாரில் அண்மையில் இந்த பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ், பி.எம்.டபுள்யூ, பெராரி உள்ளிட்ட 20 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தோடு, சோதனையின் போது எடுக்கப்பட்ட பண்ணை வீட்டின் உள் கட்டமைப்பு காட்சிகள் வெளியாகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனது காதலியும் நடிகையுமான லீனா மரியம்பாலுடன் வசிப்பதற்காக இந்த பண்ணை வீட்டை சுகாஷ் சந்திரசேகர் கட்டியதாக கூறப்படுகிறது. சீல் வைக்கப்பட்ட இந்த வீட்டை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முடக்கும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

இருப்பினும், சொத்துக்களையும், கார்களையும் சுகாஷ் சந்திரசேகர் வெவ்வேறு நபர்களின் பெயரில் வைத்து பயன்படுத்தியதாகவும் சொகுசு வீட்டை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருவது போல் ஆவணங்களை தயாரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments