தனியார் வாகனங்களில் அரசை குறிக்கும் 'G' என்ற எழுத்தை பயன்படுத்தக் கூடாது - காவல் துறை எச்சரிக்கை

0 4407
அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களில் அரசை குறிக்கும் 'G' என்ற எழுத்தை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களில் அரசை குறிக்கும் 'G' என்ற எழுத்தை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

பல தனியார் வாகனங்களில் அரசு வாகனம் என்பதை குறிக்கும் G என்ற எழுத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை முழுவதும் இதுபோன்று வாகனங்களை பிடிக்கும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சார்பில் அதிகாரிகளுக்கு வழங்கும் வாகனங்களை பதிவு செய்யும் போதே பதிவு எண்ணில் G வரிசை கொடுக்கப்பட்டிருக்கும் எனவும், மத்திய மாநில அரசு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் வாகனங்களில் அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டி இருந்தால் போதுமானது எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments