பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0 1585
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார், சென்னை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பயிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பிசியோதெரபி வழங்குவதாக கூறி நாகராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார், அவரை கடந்த மே மாதம் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து மேலும், 5 வீராங்கனைகளின் புகாரின் பேரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீதான போக்சோ வழக்கில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட வீராங்கனையின் வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments