வாழவே பிடிக்கல..!சாக போறேன்..! சூசைடுக்கு ரெடியான சூர்யா தேவி குறட்டை விட்டு தூங்கிய கூத்து...!

0 4837
வாழவே பிடிக்கல..!சாக போறேன்..! சூசைடுக்கு ரெடியான சூர்யா தேவி குறட்டை விட்டு தூங்கிய கூத்து...!

பிரபலங்களை ஆபாசமாக பேசி பேசியே புகழ்பெற்ற திருச்சி சூர்யா தேவி, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுரை மாநகர ஆணையர் அலவலகத்திற்கு வீடியோ அனுப்பியுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன போலீசார் சூர்யா தேவியை காப்பாற்ற தீயணைப்புத்துறை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நிலையில், அங்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த சூர்யா தேவியை பார்த்து மிரண்டு போன கூத்து அரங்கேறியுள்ளது. 

அரசியல் தலைவர்கள் தொடங்கி டிக்டாக் பிரபலங்கள் வரை சூர்யா தேவி வம்புக்கு இழுக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சமீபத்தில்கூட டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தேவியின் ஆண் நண்பர் மதுரையைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தர் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை காலணியால் அடித்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில், சிக்கந்தர் அளித்த புகாரின் பேரில் சூர்யாதேவி மீது வழக்குப்பதிவு செய்திருந்த மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் அவரை தேடி வந்தனர். தாம் தேடப்படுவதை அறிந்த சூர்யா தேவி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியதோடு, போலீசாரையும் அலைக்கழித்துள்ளார். நெற்றியில் பட்டையோடு பய பக்தியாக இருப்பதைப் போல் வீடியோவில் தோன்றிய சூர்யா தேவி, தாம் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இதுக்கு அப்புறமும் உயிரோடு வாழ முடியாது எனக் கூறி தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக கூறினார்.

தனது இரண்டு பிள்ளைகளையும் வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவரிடம் ஒப்படைக்குமாறும் கண்ணீர் மல்க பேசிய சூர்யா தேவி, அந்த வீடியோவை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்த வீடியோவை பார்த்த மதுரை போலீசார் மணப்பாறை டி.எஸ்.பி. பிருந்தாவுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் கிடைத்தவுடனேயே காந்திநகரிலுள்ள சூர்யா தேவி வீட்டுக்குச் சென்று டி.எஸ்.பி. பிருந்தா தலைமையிலான போலீசார் பார்த்த போது, கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினரை வரவழைத்த போலீசார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு, படுக்கையறையிலுள்ள மின்விசிறியில் தூக்கு போடுவதற்காக வேஷ்டியை கட்டி வைத்துவிட்டு, சூர்யா தேவி குறட்டை விட்டு தூக்கிங்கொண்டிருந்தார்.

போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது கூட தெரியாமல் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யா தேவி, எதுவுமே தெரியாதது போல் படுக்கையில் இருந்து எழுந்தார்.இனிமேல் வாழவே பிடிக்கலனு கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுவிட்டு, கண் அசந்து தூங்கிக் கொண்டிருந்த சூர்யா தேவியின் அலப்பறையால் கடுப்பான போலீசார் செய்வதறியாமல் சூர்யா தேவியையும், அவரது மகளையும் பக்கத்து தெருவிலுள்ள உறவினர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.வீட்டை விட்டு வெளியில் வந்த சூர்யாதேவியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திட்டி தீர்த்து வார்த்தைகளால் வசைபாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments