மும்பை ஏர்போர்ட்டில் சல்மான் கானை தடுத்த பாதுகாப்பு அதிகாரிக்கு உரிய வெகுமதி என CISF அறிவிப்பு

0 14398
மும்பை ஏர்போர்ட்டில் சல்மான் கானை தடுத்த பாதுகாப்பு அதிகாரிக்கு உரிய வெகுமதி என CISF அறிவிப்பு

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானை மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கூறிய CISF  அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாறாக கடமையை செய்த அவருக்கு பொருத்தமான வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் CISF தெரிவித்துள்ளது.

டைகர்-3 படத்தின் ஷீட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல சல்மான் கான் மும்பை விமான நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு சோதனை செய்யாமல் அவர் அடுத்த பகுதிக்கு செல்ல முயன்றதை பணியில் இருந்த CISF  பாதுகாப்பு அதிகாரி தடுத்தார்.

யாராக இருந்தாலும் பாதுகாப்பு பரிசோதனை கட்டாயம் என்று கூறி அவர் தனது கடமையை செய்தார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டாரையே தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. பாதுகாப்பு அதிகாரி தடுத்த பின் சல்மான் கான் முறையான பாதுகாப்பு சோதனைக்கு செய்து கொண்டபின்னர் தமது பயணத்தை தொடர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments