அங்கன்வாடி மையங்கள் வரும் 1ந் தேதி முதல் திறப்பு ; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

0 1618
அங்கன்வாடி மையங்கள் வரும் 1ந் தேதி முதல் திறப்பு ; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்பட உள்ள அங்கன்வாடி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் அங்கன்வாடி ஊழியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.  அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

அதே வேளையில் சமூக இடைவெளியை பின்பற்றி குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் அமர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அனைத்து பணியாளர்களும் இதனை தவறாது கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments