ஆப்கனில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று

0 1783
ஆப்கனில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று

ஆப்கனில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இவர்களுக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78 பேரும் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொற்று ஏற்பட்டவர்களில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிபை கொண்டு வந்த 3 பேரும் உள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் வைத்து இவர்களிடம் இருந்து புனித நூல் அடங்கிய சூட்கேசை பெற்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதை பயபக்தியுடன் தலையில் வைத்திருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments