மதுரையில் உள்ளது பென்னிக்குவிக் வாழ்ந்த இல்லம் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 2449
மதுரையில் உள்ளது பென்னிக்குவிக் வாழ்ந்த இல்லம் இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிக்குவிக் இல்லத்தை மாற்றி கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பதில் அளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னிக்குயிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னிக்குவிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது தவறான கருத்து என்றும், ஆதாரம் இருந்தால் நிச்சயம் மாற்ற அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments