அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

0 5141
அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதி விபத்து

தெலங்கானா மாநிலம் ஷாமீர்பேட்டை அருகே அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் அதிவேகமாக மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிறன்று ஷாமீர்பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக் ஒன்று, பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் திடீரென சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மற்றொரு பைக், சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதியதில், 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments