இந்தியா வந்த ஆப்கானியர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1935
இந்தியா வந்த ஆப்கானியர்களில் 10 பேருக்கு கொரோனா

ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காபூலில் இருந்து 81 பேர் சிறப்பு விமானம் மூலம் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் டெல்லி விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் சாவ்லா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 10 பேருக்கு பெருந்தொற்றின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத்திய போலீஸ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments