பொலிவியாவில் தண்ணீர் பற்றாக்குறை ; நீரைப் பகிர்ந்து கொள்வதில் சுற்றுலா படகு ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நடுவே மோதல்

0 1402
பொலிவியாவில் தண்ணீர் பற்றாக்குறை

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இருக்கும் நீரைப் பகிர்ந்து கொள்வதில் சுற்றுலா படகு ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நடுவே மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் உள்ள லா அங்கோஸ்துரா ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்றவும், பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளுக்கு தேவையான நீரை வழங்கவும் அணை நீரைத் திறந்து விடுமாறு கோரியுள்ளனர்.

ஆனால் அணை நீர் திறந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி சுற்றுலா படகு ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments