ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும்- உலக வங்கி

0 3557
ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும்- உலக வங்கி

ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. தாலிபன் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானில் தற்போதைய நிலைமை மிகுந்த கவலை அளிப்பதாகவும் அது நாட்டின் வளர்ச்சியையும் பெண்களையும் பாதிக்கும் என்றும் உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் மார்சலா சான்ச்ஹெஸ் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் வளர்ச்சித் திட்டங்களுக்காக 5 புள்ளி 3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக முன்பு உலக வங்கி அறிவித்திருந்தது. ஆப்கான் மறுசீரமைப்பு நிதியாக சுமார் 12 புள்ளி 9 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments