டோக்கியோ பாராலிம்பிக் 2020 - கோலாகல விழாவுடன் தொடக்கம்

0 2424
டோக்கியோ பாராலிம்பிக் 2020 - கோலாகல விழாவுடன் தொடக்கம்

டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில், கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் களைகட்டின. அணிவகுப்பில் இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் டேக்சந்த் தலைமை வகித்தார்.

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்சில், 162 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 22 வகையான விளையாட்டுகளில் நடைபெறும் 539 பதக்க போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

இந்த தொடருக்கான தொடக்க விழா டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியை ஜப்பான் மன்னர் நருஹிடோ முறைப்படி தொடங்கி வைத்தார்.

எங்களுக்கு சிறகுகள் உள்ளன என்ற கருத்தின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சர்க்கஸ் போன்ற சூழலில் இசை, நடனம், வாணவேடிக்கை என்று ஜப்பான் கலைஞர்கள் அமர்க்களப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த குழுவினர் அரங்கத்துக்குள் அணிவகுத்து வந்தனர்.தனிமைப்படுத்திலில் உள்ளதால், தொடக்கவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் உற்சாக நடைபோட்டனர்.

பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நேரலையை பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் பார்வையிட்டார். இந்திய அணி வீரர்கள் அணிவகுத்து வந்தபோது கைதட்டி வரவேற்றார்.

இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்ற தமது விருப்பத்தையும் பிரதமர் மோடி ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments