துரோகியான நண்பன்... மனைவி கழுத்தை நெரித்துக் கொலை... கொரோனாவால் இப்படியும் விபரீதம்.!

0 5895

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவருக்கு உதவி செய்ய வந்த நண்பருடன் வீட்டை விட்டுச்சென்ற மனைவியை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூரில் அரங்கேறி உள்ளது.

கிருஷ்ணாகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஜோதீஷ் இவரது மனைவி வந்தனா. மெக்கானிக்காக வேலைபார்த்து வந்த ஜோதீஷ் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த போது அவருக்கு தேவையன மருந்து பொருட்களை வாங்கிகொடுப்பதற்காக அவரது நண்பர் சுகில் என்பவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஜோதீஷின் மனைவி வந்தனாவிடம் செல்போன் நம்பரையும் கொடுத்துச்சென்றுள்ளார்.

இந்தனிலையில் சுகிலுடன் செல்போனில் பேச ஆரம்பித்ததோடு இரவெல்லாம் வாட்ஸ் அப் சாட்டிங் செய்யும் அளவுக்கு பழக்கம் நெருக்கமானதாக கூறப்படுகின்றது. கொரோனாவில் இருந்து கணவர் கோதீஷ் குணமான நிலையில், இரவில் மனைவி செல்போனில் பேசுவதை கண்டு சந்தேகமடைந்து அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் தனது கணவர் ஜோதீஷிடம் கோபித்துக் கொண்டு பெங்களூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கிருந்து தனது காதலர் சுகிலுடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

ஓசூரில் தனி வீடு எடுத்து சுகிலுடன் வசித்து வந்த வந்தனாவை பெற்றோர் உதவியுடன் சமாதனப்படுத்திய ஜோதீஷ் தனது வீட்டு அழைத்து வந்துள்ளார்.

அவர் மீண்டும் சுகிலுடன் செல்போன் பேச்சை தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த ஜோதீஷ், மனைவி வந்தனாவை கழுத்தை இறுக்கி கொலை செய்து அவரது சடலத்தை வீட்டுக்குள் வைத்துப்பூட்டிவிட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உதவிக்கு வந்த நண்பனின் தகாத செயலுக்கு மயங்கி தடம்மாறிய பெண்ணால் ஒரு குடும்பமே நிர்மூலமான சோகம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments