ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை

0 3104

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா-ரஷ்யாவின் ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் தாங்கள் விவாதித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். முக்கியமான விஷயங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை வரும் நாட்களிலும் தொடர இருவரும் முடிவு செய்துள்ளோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments