கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதால் போலீஸ் வேடம் அணிந்து உறவினரின் லாரியைக் கடத்திய கும்பல்

0 1878

புதுச்சேரி அருகே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு தொல்லை செய்த உறவினரைப் பழிவாங்க, அவரது டேங்க்கர் லாரியைக் கடத்திச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் இயங்கி வரும் சுபம் ஃபேபிரிக் கேரியர்ஸ் என்ற நிறுவனத்துக்கு சென்னையில் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய பேஸ் ஆயில் ஏற்றி வந்த லாரியை போலீஸ் வேடம் அணிந்து வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.

லாரியை ஓரிடத்திலும் ஓட்டுநரை மற்றொரு இடத்திலும் விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பியது. விசாரணையில் லாரி உரிமையாளர் கார்த்திக்கிடம் அவரது உறவினர் மகனான எர்ஷாத் என்பவன், 40 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்ததும், அதனைத் திருப்பிக் கேட்டு அவர் தொல்லை செய்து வந்ததால் ஆத்திரத்தில் லாரியைக் கடத்தியதும் தெரியவந்தது.

எர்ஷாத் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments