விஜய் சேதுபதியின் 'லாபம்' படம் வெளியாவதில் சிக்கல்

0 3198

வி.பி.எஃப் கட்டணம் செலுத்துவதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் விஜய்சேதுபதியின் லாபம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளையடுத்து, நேற்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு சில திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரண்மனை -3 , கான்ஜூரிங் - 3, விஜய் சேதுபதியின் லாபம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இந்நிலையில், டிஜிட்டல் முறையில் படங்களை வெளியிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணம் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து இருத்தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே வார இறுதியில் புதிய படங்கள் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments