கொடநாடு வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

0 1816

கோடநாடு வழக்கில் சாட்சியான ரவி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்துவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்களால் முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

முத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments