சென்னையில் நில அதிர்வு "வழக்கமானதுதான் அச்சம் வேண்டாம்" ஆய்வாளர்கள் விளக்கம்

0 4215

சென்னைக்குக் கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் காரணமாக சென்னை திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 

சென்னை மாநகரின் மயிலாப்பூர், அடையார் , ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட கிழக்குப் பகுதியில் செவ்வாய்கிழமை மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. அடையாரில் மேல்மாடிகளில் வசிப்பவர்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர் என்றும் தரைத்தளத்தில் அதிர்வு உணரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னைக்கு வடகிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து 296 கிலோ மீட்டர் கிழக்கு திசையிலும் வங்கக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. அதன் தாக்கமே சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாகப் பேசிய வானியல் ஆய்வாளர் பிரதீப் ஜான், நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னையில் நில அதிர்வு ஏற்படுவது இயல்பானதுதான் என்றும் நிலநடுக்க மையப்பகுதி சென்னையில் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார். "கடலில் 7 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே சுனாமி ஆபத்து என்று கூறிய அவர், நிலத்தகடு சந்திக்கும் பகுதியில் தமிழகம் இல்லை என்பதால் நிலநடுக்க ஆபத்து குறைவு என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments