உணவு, எரிபொருள் சப்ளையை அனுமதிக்காத தாலிபன்கள் : ஆயிரக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் வாடுவதாக தலைமறைவு தலைவர் டுவிட்

0 9864

ப்கனின் வடக்கு மாகாணமான பாக்லானில் உள்ள மக்களின் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் சப்ளையை தாலிபன்கள் அனுமதிக்காததால் அங்கு கொடூரமான பசி பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அங்கு தலைமறைவாக இருக்கும் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இதை தெரிவித்துள்ள அவர், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கின் நுழைவுப்பகுதியில் குவிந்துள்ள தாலிபன்கள் சிறுவர்களையும், வயதானவர்களையும் கடத்தி கடந்த 2 நாட்களாக அவர்களை தங்களது கேடயமாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபன்களின் தடை காரணமாக ஆப்கனில் விநியோகிக்க வேண்டிய 500 டன் மருந்து பொருட்களை வழங்க முடியாத நிலை உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல இயக்குநர் ரிச்சர்ட் பிரென்னனும் கவலை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments