”கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் நிதி இழப்பீடு ஏற்படவில்லை”-எஸ்.பி.வேலுமணி

0 2319
கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் நிதி இழப்பீடு ஏதும் ஏற்படவில்லை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் நிதி இழப்பீடு ஏதும் ஏற்படவில்லை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அவர், 2015-16 ஆம் ஆண்டு முதல், 2019-20 ஆம் ஆண்டு வரை மத்திய அரசிடம் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிக்கு வரவேண்டிய மொத்த மானியம் 17,009.76 கோடியில் 14,431.76 கோடி பெற்று வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தபடவில்லை என்றும், தற்போது வழக்குகள் நிறைவுற்றதால், உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் நிலுவையில் உள்ள 2,577.98 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்று வரவு வைக்க இயலும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments