சாலையை கடக்க முடியாமல் பரிதவித்த அண்ணப் பறவைகள் : போக்குவரத்தை சீர் செய்து பறவைகளுக்கு உதவிய வாகன ஓட்டி

0 4940

ஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்த அண்ணப் பறவையையும், அதன் குஞ்சையும் வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவும் வீடியோ வெளியாகி உள்ளது.

Narrows Bridge-ல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் கருப்பு வண்ண அண்ணப் பறவையும் அதன் குஞ்சும் பரிதவித்து நின்றன.

அவற்றை சட்டை செய்யாமல் ஏராளமான வாகனங்கள் கடந்து சென்ற நிலையில், டிரக் ஓட்டுநர் ஒருவர் மற்றொரு வாகன ஓட்டுநரின் உதவியுடன் போக்குவரத்தை சீர் செய்து அண்ணப் பறவைகள் சாலையை கடக்க உதவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments