கடலூர் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தியதாக புகார்-புதுச்சேரி மீனவர்களை நடுக்கடலுக்கு சென்று விரட்டி அடித்த அதிகாரிகள்

0 1681

கடலூர் கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் விரட்டியடித்தனர்.

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலூர் கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர் என கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடலோர பாதுகாப்புக் குழும போலீசாருடன் நடுக்கடலுக்குச் சென்ற அதிகாரிகள், ஒலிப்பெருக்கி வாயிலாக அவர்களை எச்சரித்து, அங்கிருந்து விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments