தமிழகத்தில் மேலும் ஒரு மாநகராட்சியாக உருவாகிறது தாம்பரம்..!

0 3858

சென்னையை அடுத்துள்ள தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள், அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள், அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

மேலும் திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும் செங்கல்பட்டு, பூந்தமல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகள், அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம் வடலூர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை,தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ளிட்ட  பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments