ஹமாஸ் முகாம்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் : இஸ்ரேலில் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதற்கு பதிலடி.!

0 1545

ஸ்ரேலில் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதற்கு பதிலடி தரும் விதமாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் முகாம்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே 11 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் வான் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஏர் பலூன்களை அனுப்பி வெடிக்கச் செய்ததால் வனப்பகுதிகள் மற்றும் வயல்கள் பற்றி எரிந்தன.

இதையடுத்து காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலை மற்றும் ராக்கெட் ஏவுகணை ஏவுதளத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments