சட்டப்பேரவையில் முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது-அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 1755

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கூறும் முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது என
அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர், ஏதாவது குறைகள், குற்றங்கள், முறைகேடுகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்தால் மட்டும் பதிலளிக்குமாறு அமைச்சர்களிடம் கூறினார்.

இன்றைய பேரவையில் இரண்டு மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால், மற்ற விவரங்களை எல்லாம் பேசி முடித்தபிறகு பதிலுரையில் கூறிக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments