ஹைதியில் நிலநடுக்கத்தால் தங்களது உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள்

0 1641
ஹைதியில் நிலநடுக்கத்தால் தங்களது உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள்

ஹைதியில் நிலநடுக்கத்தால் தங்களது உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் பசி, பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு லாரி ஒன்றில் கொண்டு வரப்பட்ட உணவு போட்டலங்களை அப்பகுதி மக்கள் முண்டியடித்துக்கொண்டு எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹைதியில் கடந்த 14-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 2,207 பேர் உயிரிழந்த நிலையில், 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் பசி மற்றும் தொற்று நோய்களால் ஏராளமான குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், நிலநடுக்கத்தால் சுமார் அரை மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments