வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

0 1686
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments