ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் நாட்டின் விமானம் ஈரானிற்கு கடத்திச் சென்றதாக தகவல்

0 2848

ஆப்கனில் சிக்கியுள்ள உக்ரேனிய மக்களை மீட்க அனுப்பிய விமானத்தை அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய சிலர் கடத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கடத்தப்பட்ட தங்களது விமானம், அதை கடத்தியவர்களால் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாக உக்ரேன் வெளியுறவு துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் (Yevgeny Yenin) டாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

உக்ரேனியர்களை ஏற்றுவதற்கு பதிலாக, தங்களது விமானத்தில் வேறு பலர் ஏற்றப்பட்டதாகவும் அது கடத்தப்பட்டு விட்டதாகவும் கூறிய அவர் விமானம் திருடு போய் விட்டது என்றும் தெரிவித்துள்ளார். அதை மீட்க உக்ரேன் அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? விமானத்தில் உக்ரேன் நாட்டவர் இருந்திருந்தால் அவர்கள் மீட்கப்படுவார்களா என்பது குறித்து அவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments