நடிகை மீரா மிதுனை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து விசாரிக்க திட்டம்

0 2859
நடிகை மீரா மிதுனை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து விசாரிக்க திட்டம்

நடிகை மீரா மிதுனை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து விசாரிக்க எம்.கே.பி.நகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தன்னைப் பற்றி மீரா மிதுன் அவதூறு பரப்புவதாக ஜோ மைக்கேல் என்பவர் கடந்த ஆண்டு அளித்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நடிகை மீது எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதற்கிடையில், பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய புகாரில் நடிகை மீராது மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜோ மைக்கேல் அளித்த புகாரில் மீரா மிதுனை மீண்டும் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள எம்.கே.பி.நகர் போலீசார் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments