பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார் கே.டி.ராகவன்

0 7905

சமூக வலைதளங்களில் பாஜகவின் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று வெளியானதை தொடர்ந்து அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

30 வருடங்களாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சிப் பணி செய்யும் தம்மை களங்கப்படுத்தும் விதத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்த பின் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் கே.டி.ராகவன் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments